நேரடியாக முதன்மைப் பகுதிக்குச் செல்

கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டாலோ மூடப்பட்டாலோ

புதுப்பிக்கப்பட்டது

ஒருவர் எங்கள் கம்யூனிட்டி வழிகாட்டுதல்களைக் கடுமையாக மீறினால், அல்லது திரும்பத் திரும்ப மீறினால், நாங்கள் அவருக்கு எச்சரிக்கை தரலாம். அவருடைய கணக்கை 1, 7 அல்லது 30 நாட்களுக்குத் தற்காலிகமாக முடக்கலாம், அல்லது நிரந்தரமாக மூடலாம். இவை ஒவ்வொன்றும் ஒரு விதியும் காரணமும் உள்ள ஒரு முடிவு. அதை மறுபரிசீலனை செய்யுமாறு நீங்கள் எங்களிடம் கேட்கலாம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை என்பது ஒரு நோட்டீஸ். உங்கள் கணக்கு முன்பு போலவே செயல்படும். அந்த நோட்டீஸ் விதியையும் எங்கள் காரணத்தையும் சொல்லும். இது மீண்டும் நடந்தால், உங்கள் கணக்கைத் தற்காலிகமாக முடக்கலாம் என்றும் சொல்லும்.

தற்காலிக முடக்கம்

  • ஒவ்வொரு போனிலும் கணினியிலும் உங்களை வெளியேற்றுவோம். தற்காலிக முடக்கம் முடியும் வரை உங்களால் உள்நுழைய முடியாது.
  • உங்கள் போஸ்ட்களும் கருத்துகளும் அப்படியே இருக்கும்.
  • உங்களுக்குக் கடை இருந்தால், தற்காலிக முடக்கம் முடியும் வரை வாங்குபவர்களுக்கு அது தெரியாது.

மூடப்பட்ட கணக்கு

  • எல்லா இடங்களிலும் உங்களை வெளியேற்றுவோம். உங்களால் மீண்டும் உள்நுழைய முடியாது.
  • உங்கள் ப்ரொஃபைலையும் போஸ்ட்களையும் கருத்துகளையும் எல்லோரிடமிருந்தும் மறைப்போம், உங்கள் கடையையும் மூடுவோம். நீங்கள் உருவாக்கிய சர்க்கிள்கள், அவற்றின் மற்ற அட்மின்களிடம் இருக்கும்.
  • அந்தப் போன் எண்ணைக் கொண்டு புதிய கணக்கை உருவாக்க முடியாது.

உள்நுழைய முயலும்போது என்ன தெரியும்

உங்கள் கடவுச்சொல்லையோ குறியீட்டையோ உள்ளிட்ட பிறகு, Sagazo உங்களை உள்நுழைய விடாது. அதற்குப் பதிலாக, அந்த முடிவைக் காட்டும்: விதி, எங்கள் காரணம், தற்காலிக முடக்கம் எப்போது வரை நீடிக்கும் என்பது, மறுபரிசீலனை கேட்பதற்கான ஒரு படிவம். செயலியும் இதே மெசேஜைக் காட்டும், கூடவே Ask for a review (மறுபரிசீலனை கேள்) பொத்தானும் இருக்கும்.

மறுபரிசீலனைப் பக்கம் அதன் லிங்க் காலாவதியாகிவிட்டது என்று சொன்னால், புதிய லிங்க்கைப் பெற மீண்டும் உள்நுழையுங்கள்.

மறுபரிசீலனை கேளுங்கள்

முடிவு வந்ததிலிருந்து உங்களுக்கு 30 நாட்கள் உள்ளன. நாங்கள் 7 நாட்களுக்குள் பதில் தருவோம். முடிவைத் திரும்பப் பெற்றால், எல்லாம் முன்பு இருந்தது போலவே திரும்ப வரும். மறுபரிசீலனை கேட்பது எப்படி என்பதைப் பாருங்கள்.

இன்னும் தீர்வு கிடைக்கவில்லையா?

எங்களுக்கு மெசேஜ் அனுப்புங்கள், ஒருவர் பதில் சொல்வார்

என்ன நடந்தது என்று சொல்லுங்கள், லிங்க்குகள் இருந்தால் சேருங்கள். அப்போதுதான் பதில் சொல்லும் முன் நாங்கள் பார்க்க முடியும். உங்கள் அந்தரங்கப் புகைப்படம் போன்ற அவசரமான விஷயங்களைப் பாதுகாப்புப் படிவம் மூலம் அனுப்புங்கள்.

எங்களுக்கு மெசேஜ் அனுப்பு

மீண்டும் இணைக்கிறோம்…

சிறிது நேரத்தில் திரும்பி வருவோம்.