உங்கள் கடையில் ஆர்டர் செய்தவர்களை Customers (வாடிக்கையாளர்கள்) பக்கம் பட்டியலிடும். மிகச் சமீபத்தில் ஆர்டர் செய்த 200 பேர் வரை அதில் இருப்பார்கள். ஒவ்வொருவரும் எத்தனை ஆர்டர்கள் செய்தார்கள், மொத்தம் எவ்வளவு செலவழித்தார்கள், கடைசியாக எப்போது ஆர்டர் செய்தார்கள் என்று அது காட்டும். மேலே மூன்று எண்கள் இருக்கும். உங்களுக்கு எத்தனை வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள், இரண்டாவது ஆர்டருக்காக எத்தனை பேர் திரும்ப வந்தார்கள், ஒரு வாடிக்கையாளர் சராசரியாக எவ்வளவு செலவழித்தார் என்று அவை சொல்லும். ரத்துசெய்யப்பட்ட ஆர்டர்கள் கணக்கில் சேராது.
ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்டர்கள் உள்ள வாங்குபவருக்கு, Repeat buyer (மீண்டும் வாங்குபவர்) என்ற லேபிள் இருக்கும். முதலில் கவனித்துக்கொள்ள வேண்டியவர்கள் இவர்கள்தான். ஏனென்றால், அவர்கள் ஏற்கெனவே உங்களை நம்புகிறார்கள்.

ஒரு வாங்குபவரின் வரலாறு
ஒரு வாடிக்கையாளரை அழுத்தினால், அவருடைய பக்கம் திறக்கும். உங்கள் கடையில் அவர் செய்த ஒவ்வொரு ஆர்டரும், மொத்தச் செலவு, ஆர்டர்களின் எண்ணிக்கை, சராசரி எல்லாம் அதில் இருக்கும். இது உங்களுடனான அவருடைய வரலாறு மட்டுமே. மற்ற கடைகளில் அவர் என்ன வாங்கினார் என்பது நீங்கள் பார்க்க வேண்டிய விஷயம் அல்ல.

அங்கிருந்து எந்த ஆர்டரையும் திறக்கலாம், அதைப் பற்றி வாங்குபவருக்கு மெசேஜ் அனுப்பலாம்.
இதை வைத்து என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது
யார் திரும்பத் திரும்ப வருகிறார்கள் என்று கவனிக்க இதைப் பயன்படுத்துங்கள். திரும்ப வந்த வாங்குபவரின் புதிய ஆர்டரைப் பேக் செய்யும் முன், கடந்த முறை அவர் என்ன ஆர்டர் செய்தார் என்று பாருங்கள். ஒரு புரோமோ குறியீடு புதியவர்களைக் கொண்டுவந்ததா, அதே பழையவர்களைக் கொண்டுவந்ததா என்றும் பாருங்கள்.
இங்கே உள்ள பெயர்களும் எண்களும் ஆர்டர்களை அனுப்புவதற்கானவை. ஒருமுறை வாங்கியவர்களுக்கு ஆஃபர்களை அனுப்புவதற்காக மெசேஜ் உரையாடல் இல்லை. அவர்களுடைய போன் எண்கள் ஆர்டரில் இருப்பது கூரியர் லேபிளுக்காக, பிராட்காஸ்ட் லிஸ்ட்டுக்காக அல்ல. இந்தியாவின் தரவுப் பாதுகாப்புச் சட்டம், வாங்குபவரின் விவரங்களை அவருடையவையாகவே கருதுகிறது. நாங்களும் அப்படியே கருதுகிறோம்.