Earnings (வருமானம்) பக்கத்தில் உங்கள் விற்பனை ஒரே பார்வையில் தெரியும். இன்று, இந்த வாரம், இந்த மாதம் நீங்கள் வசூலித்த தொகையும், உங்கள் சராசரி ஆர்டரும் அதில் இருக்கும். எத்தனை வாங்குபவர்கள் மீண்டும் வந்தார்கள், எந்தப் பொருட்கள் அதிகம் விற்பனையாகின்றன என்பதும் இருக்கும். இங்கே உள்ள எண்கள் விற்பனையின் முழுத் தொகைகள். அவற்றிலிருந்து புரோமோ குறியீட்டுத் தள்ளுபடி கழிக்கப்படவில்லை. GST பதிவு உள்ள கடைக்கு வரும் தொகையில் பிடிக்கப்படும் TCS தொகையும் கழிக்கப்படவில்லை.

நான்கு எண்கள்
- Today (இன்று), This week (இந்த வாரம்), This month (இந்த மாதம்) என்பவை, இன்றும், கடந்த 7 நாட்களிலும், கடந்த 30 நாட்களிலும் செய்யப்பட்ட ஆர்டர்களின் மதிப்பு. ரத்துசெய்யப்பட்ட ஆர்டர்கள் இதில் சேராது. ஒரு ஆர்டர் செய்யப்பட்ட நொடியிலிருந்தே அது கணக்கில் சேரும், டெலிவரி ஆனதிலிருந்து அல்ல.
- Average order (சராசரி ஆர்டர்) என்பது, மொத்த மதிப்பை ஆர்டர்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது. அதன் கீழே, மீண்டும் வாங்கியவர்களின் எண்ணிக்கை இருக்கும்.
Overview (மேலோட்டம்) பக்கத்திலும் இன்றைய எண் Earned today (இன்றைய வருமானம்) என்ற பெயரில் தெரியும். அதன் கீழே This week இருக்கும். அதனால், அவற்றுக்காக நீங்கள் இங்கே வர வேண்டியதில்லை.
வரைபடங்கள்
Revenue (வருவாய்), Orders (ஆர்டர்கள்) என்ற இரண்டு வரைபடங்களும், கடந்த 7 அல்லது 30 நாட்களின் ஒவ்வொரு நாளையும் காட்டும். மேலே வலது பக்கம் உள்ள பட்டியலில் காலத்தை மாற்றுங்கள். உங்கள் சொந்த விற்பனைப் போக்கை நீங்களே பார்ப்பதற்காகத்தான் இந்த வரைபடம்.
அதிகம் விற்பவை
Best sellers (அதிகம் விற்பவை) பகுதி, உங்கள் பொருட்களில் அதிகம் விற்பனையானவற்றைப் பட்டியலிடும். எத்தனை விற்றன என்பதை வைத்து அவை வரிசைப்படுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அருகில் அது சம்பாதித்த தொகை இருக்கும். பத்து முறை விற்ற 200 ரூபாய் துப்பட்டா, இரண்டு முறை விற்ற 2,000 ரூபாய் லெஹங்காவுக்கு மேலே இருக்கும். எதை மீண்டும் புகைப்படம் எடுப்பது, எதற்கு முதலில் இருப்பு சேர்ப்பது என்று முடிவு செய்ய இதைப் பயன்படுத்துங்கள்.

இங்கே இல்லாதவை
உங்களுக்கு வந்து சேரும் தொகை இங்கே இல்லை. ஆன்லைன் பேமெண்ட் இன்னும் தொடங்கவில்லை. அதனால், காட்டுவதற்கு எதுவும் இல்லை. பணம் எப்போது, எப்படிக் கிடைக்கும் என்பதைப் பாருங்கள். டெலிவரி கட்டணங்களும் இங்கே இல்லை. கூரியரை Sagazo ஏற்பாடு செய்தால், வாங்குபவர் டெலிவரி கட்டணத்தைச் செலுத்துவார், அது கூரியர் நிறுவனத்துக்குப் போகும். அதனால், அது ஒருபோதும் உங்களுடையது அல்ல. பார்சலை நீங்களே அனுப்பினால், கூரியர் உங்கள் சொந்தச் செலவு.